கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும்,குர் ஆனிலே அல்லாஹ் சில அத்தாட்சிகளை சொல்லி காட்டி உள்ளான் உதாரணமாக நூஹ் நபியின் கப்பல் பற்றி குர் ஆன் சொல்கிறது இதை சில காலங்களுக்கு முன்புதான் கண்டுபிடித்துள்ளார்கள். அது போல் பிர் அவுனின் உடல் சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு இது பற்றி தெறிந்திருக்காது. இது போல் இன்னும் நாம் கண்டுப்டிக்கப்படாத அத்தாட்சிகள் குர் ஆனிலே உண்டா? உதாரனமாக 2: 65 மற்றும் 2:66 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சிலரை குரங்குகளக்கியதாகவும் அதை பின் வருபவர்களுக்கு அத்தாட்சியும் ஆக்கினோம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் அறிந்த வரை இந்த வசனம் சொல்லும் அத்தாட்சி இன்னும் கண்டுபிடிக்கப்படாத அத்தாட்சி என நினைகின்றேன். இது போல் இன்னும் நாம் இன்னமும் கண்டுபிடிக்காத அத்தாட்சிகள் குர் ஆனுல் உண்டா?
- Rajai mohammad, Sri lanka

நவீன விஞ்ஞானத்தை உறுதிப்படுத்தும் பல முன்னறிவித்தல்கள் நமது காலத்தில் கூட நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிரசவ நேரத்தில் குழந்தை பிரசவிப்பதைப் பொருத்தவரையில் இதுவரை காலமும் செய்து வந்ததற்கு மாற்றமாக தற்காலத்தில் மேற்கு நாடுகளில் புதிய ஒரு முறையைக் கையால்கிறார்கள். அதாவது நீருக்குள் பிரசவம் பார்ப்பது.
பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியா விலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.
தினமலர் 22-9-2009
பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர் ஆன் இறைவனின் வேதம் தான் என்பதையும், அது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று என்பதையும் நிரூபணம் செய்துள்ளது.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். (திருக்குர்ஆன் 19:23.24)
மேற்கண்ட வசனம் நபியவர்களின் காலத்தில் கண்டுபிடிக்கப்படாத நமது காலத்தில் நிரூபிக்கப்பட்ட ஒரு அத்தாட்சியாகும். இது போல் என்னற்ற வசனங்கள் இருக்களாம். நாம் நமது காலத்தில் திருமறைக் குர்ஆனில் நான்கில் ஒரு பகுதியின் அத்தாட்சி நிரூபனத்தைத் தான் பார்த்திருக்கிறோம். பிற்காலத்தில் அனைத்து அத்தாட்சிகளும் நிரூபிக்கப்படலாம். காலத்திற்கு ஏற்ப அதற்குறிய ஏற்பாட்டை இறைவன் வைத்திருப்பான்.
இதே நேரத்தில் திருமறைக் குர்ஆன் இறைவனிடம் இருந்து வந்தது என்பதை ஈமான் கொண்டு அதன் வழிகாட்டுதல் படி வாழ வேண்டும் என்பதுதான் நமக்குறிய கட்டளையாகும்.
நீங்கள் குறிப்பிட்டுக் காட்டிய 2 வது அத்தியாயத்தின் 65 மற்றும் 66வது வசனங்களில் இடம் பெரும் அத்தாட்சி ஏற்கனவே நடந்து முடிந்த ஒன்றாகும். இதனை 2- 66வது வசனமே தெளிவாக உணர்த்துகின்றது.
அதை அக்காலத்தவருக்கும், அடுத்துவரும் காலத்தவருக்கும் பாடமாக ஆக்கினோம் என்பது குரங்குகளாக குறிப்பிட்ட சமுதாயத்தார் மாற்றப்பட்டதை அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கே இறைவன் முதலில் அத்தாட்சியாக ஆக்கியிருக்கிறான்.
உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! 'இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம் (திருக்குர்ஆன் 2-65)
அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.(திருக்குர்ஆன் 2-66)
இதனை நபியவர்களின் ஹதீஸ் தெளிவாக நமக்கு விளக்குகின்றது.
யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூற்கள்: முஸ்லிம் 4814, 4815, அஹ்மத் 3517, 3910)
எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள். இந்த முன்னறிவிப்பு, அத்தாட்சி நடந்து முடிந்த ஒன்றாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
- பதில் : ரஸ்மின் MISc
No comments:
Post a Comment